இந்தியா
மோடி, அமித்ஷாவின் கைக்கூலியாக இ.டி: காங்., பொறுப்பாளர் மோகன் குமாரமங்கலம் பேச்சு
மோடி, அமித்ஷாவின் கைக்கூலியாக இ.டி: காங்., பொறுப்பாளர் மோகன் குமாரமங்கலம் பேச்சு
மோடி மற்றும் அமித்ஷாவின் கைக்கூலியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மோகன் குமாரமங்கலம் குற்றம் சாட்டியுள்ளார்.புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது, “பிரதமர் மோடி, அமித்ஷாவின் கைக்கூலியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. அமலாக்கத்துறை அமித்ஷா துறையாக மாறியுள்ளது. அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை போலி வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க-வில் இழுப்பது வாடிக்கையாக உள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்த விதமான ஆதாரமும் இல்லை. ஆனால், சோனியா மற்றும் ராகுலை அழைத்து விசாரிக்கின்றனர். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை. இது தொடர்பான குற்றப்பத்திரிகை வழங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? ரூ. 432 கோடி முறைகேடு என்று வருமான வரித்துறை கூறுகிறது. ஆனால், ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல் என்று பா.ஜ.க-வினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்து புகார்களையும் காங்கிரஸ் சட்டரீதியாக சந்திக்கும்” என்று கூறினார்.