இலங்கை

யாத்திரை வந்த இளம் காதலர்கள் ; மாணவி வீடு செல்ல மறுத்ததால் சிக்கிய ஜோடி

Published

on

யாத்திரை வந்த இளம் காதலர்கள் ; மாணவி வீடு செல்ல மறுத்ததால் சிக்கிய ஜோடி

 ஹட்டன் பகுதியில், வீட்டாரிடம் தெரிவிக்காமல் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த  பாடசாலை மாணவன் மற்றும் மாணவி,  நீதிமன்ற உத்தரவுக்கமைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளது. 

Advertisement

வீட்டாரிடம் தெரிவிக்காமல் ஹட்டன் வீதி வழியாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன், மாணவி இருவரும் பொலிஸாரால் ஹட்டன் பதில் நீதவானின்  உத்தரவுக்கமைய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் வீதி வழியாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த குறித்த இருவரும் காதலர்கள் என தெரியவந்துள்ளது.

ஹட்டன் நகரில் சுற்றித்திரிந்த அவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்து விசாரித்த போது, ​​ இருவரும் தங்கள் வீடுகளுக்கு தெரிவிக்காமல் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்ததாக ஹட்டன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த விடயம் குறித்து ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் எல்பிட்டிய பொலிஸாரிடம் விசாரித்த போது, ​​குறித்த மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களுடைய பெற்றோர் பொலிஸில் புகார் அளித்ததை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பின்னர் குறித்த மாணவர்களின் பெற்றோரையும் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து மாணவர்களை ஒப்படைத்த போது, மாணவி தனது பெற்றோருடன் வீட்டிற்கு செல்ல மறுத்ததால், ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version