இலங்கை
யாழ். போதனா மருத்துவமனை வாயிலில் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது!
யாழ். போதனா மருத்துவமனை வாயிலில் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் வாயிற் பகுதியில் வைத்து, கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகளைத் தொடர்ந்து அவர் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.