இலங்கை

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் ; சாரதி படுகாயம்

Published

on

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் ; சாரதி படுகாயம்

நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் வாகன சாரதி காயமடைந்து லக்சபான பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த விபத்து இன்று (22) காலை 7.15 மணியளவில் நல்லதன்னி – கினிகத்தேனை பிரதான வீதியில் உள்ள நோர்டன்பிரிட்ஜ்  பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

பயணித்துக் கொண்டிருந்த காரில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கார் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version