இலங்கை

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி

Published

on

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ- டெல்லி அணிகள் மோதுகிறன. இதில் நாணயச்சுழற்சியில் டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் – மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.

Advertisement

அதிரடியாக விளையாடிய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் சேர்த்தது.

இதனையடுத்து வந்த பூரன் 9 ஓட்டங்களிலும் சமத் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து டேவிட் மில்லர் மற்றும் பதோனி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

Advertisement

இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 159 ஓட்டங்கள் எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 13 பந்துகள் மீதமிருக்க 161 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version