வணிகம்

Gold Rate Today: ரூ. 74,000 த்தை கடந்த ஒரு சவரன் தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஷாக்!

Published

on

Gold Rate Today: ரூ. 74,000 த்தை கடந்த ஒரு சவரன் தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஷாக்!

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறதுதங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது.இந்தநிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. மேலும் இதுவரையில் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கிராம் ரூ. 9,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.9.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் வெள்ளி ஒரு கிராம் ரூ. 111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,11,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version