சினிமா
அமீரைப் பார்த்த பிறகு தான் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைச்சது..! பாவனி ஓபன் டாக்..!
அமீரைப் பார்த்த பிறகு தான் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைச்சது..! பாவனி ஓபன் டாக்..!
தமிழில் சின்னத்திரையில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை பாவனி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவமான பேச்சு, நடிப்பு மற்றும் நேர்மையான அணுகுமுறையால் சின்னத்திரை ரசிகர்களிடையே புதிய அனுபவத்தை ஏற்படுத்தியிருந்தார்.இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் மூலம் அறிமுகமான அமீருடன் திருமணம் செய்து கொண்ட பாவனி, திருமணத்திற்குப் பிறகு தனது வாழ்கையைப் பற்றி உருக்கமாக ஒரு நேர்காணலில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த நேர்காணல் ரசிகர்கள் மத்தியில் தீவிரமாகப் பரவி வருகின்றது.பாவனி அதன்போது, “நான் பல ஆண்டுகளாக ஒரு உறவுக்காக காத்திருந்தேன். குடும்ப வாழ்க்கை பற்றிய கனவுகளோடு வளர்ந்தவள் நான். எனக்குத் திருமணம் என்பது ஒரு பெரிய கனவாக இருந்தது. அந்த கனவுகள் அமீர் வந்தபிறகு தான் நனவாகியது.” என்று கூறியிருந்தார்.அதிகமான மக்கள் “திருமணம் ஒரு கட்டுப்பாடு” என்ற எண்ணத்தில் இருக்கும்போது, பாவனி அதற்கு நேர்மாறாக திருமணத்தின் பின்னர் தான் உண்மையான அமைதியும் சந்தோசமும் கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.மேலும் “என் வாழ்க்கையில் நானே எதிர்பாராத விதமாக சில தவறான முடிவுகளை எடுத்தேன். பல ஏமாற்றங்கள் சந்திக்க நேர்ந்தது. சில நெருக்கமான உறவுகளில்கூட பாசத்தை காண முடியாமலிருந்தேன். ஆனா அமீர் வந்த பிறகு உண்மையான அன்பு, பாசம் இவையெல்லாம் என்ன என்பதைக் கண்டேன்.” எனவும் கூறியிருந்தார்.