இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரிய பாப்பரசர்
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரிய பாப்பரசர்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு மறைந்த பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் கோரியிருந்தார் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மறைந்த பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் இலங்கை தொடர்பில் மிகுந்த கரிசனையுடனும் அன்புடனும் செயற்பட்டவர் என கர்தினால் புகழாரம் சூட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட ஆண்டில் ஈஸ்டர் பண்டிகையின் போது பாப்பாண்டவர் தனது ஈஸ்டர் செய்தியில் இலங்கை பற்றி முதலில் குறிப்பிட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறைந்த பாப்பாண்டவர் பாரிய அளவில் உதவிகளை வழங்கியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 41 பேரை பாப்பாண்டவர் வத்திக்கானில் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வழங்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான யதார்த்தத்தை புரிந்து கொண்ட அதனுடன் தொடர்புடையவர்களை கண்டறியுமாறு பாப்பாண்டவர் இலங்கை ஆட்சியாளர்களிடம் கோரியிருந்தார் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.