விளையாட்டு
சிக்சருடன் ஆட்டத்தை முடித்த ராகுல்; லக்னோ அணியின் உரிமையாளருடன் பேச மறுப்பு: பழைய சம்பவம் வைரல்
சிக்சருடன் ஆட்டத்தை முடித்த ராகுல்; லக்னோ அணியின் உரிமையாளருடன் பேச மறுப்பு: பழைய சம்பவம் வைரல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 22) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கே.எல்.ராகுல் லக்னோ அணியின் உரிமையாளரிடம் அலச்சியமாக நடந்துகொண்ட வீடியோ க்ளிப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆங்கிலத்தில் படிக்க: KL Rahul ‘avoids’ interaction with former club boss after helping DC to victory over LSGஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் கே.எல்.ராகுல். ராயல்சேலஞ்சர் அணியில் இணைந்து தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ராகுல், கடந்த 2022-ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2022, 23-ம் ஆண்டுகளில் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணி, கடந்த ஆண்டு, 7-வது இடத்தை பிடித்து ப்ளேஅப் வாய்ப்பை இழந்தது.மேலும் 2024-ம் ஆண்டு சீசனில், ராகுலின் ஆட்டத்தை பார்த்து அதிருப்தியடைந்த லக்னோ அணியின் உரிமையாளர், சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் வைத்து ராகுலிடம் கடுமையாக நடந்துகொண்டார். இது குறித்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாக பரவியதை தொடர்ந்து 2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ராகுல், ஏலத்தில் பங்கேற்று டெல்லி அணியால் வாங்கப்பட்டார். டெல்லி அணியில் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கியபோதும் அவர் ஏற்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.டெல்லி அணியின் விக்கெட் கீப்பராக களமிறங்கி விளையாடி வரும் ராகுல் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்த ராகுல், இது என்னுடைய மண்ணு என்று சொல்வது போல் பேட்டை தரையைில் தட்டி தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது பெரும் வைரலாக பரவியது. அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி தற்போது 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.இதனிடையே நேற்று, லக்னோவில் நடைபெற்ற, லீக் போட்டியில் டெல்லி லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி நிர்ணையித்த 160 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் இருந்த ராகுல், 42 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்திருந்தார். அரைசதம் அடித்து கவனம் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல், மற்றொரு விஷயத்திற்காககும் ராகுல் கவனம் ஈர்த்தார்.இந்த போட்டியில் 18வது ஓவரின் 5-வது பந்தில் மிட் விக்கெட்டில் சிக்ஸர் அடித்த ராகுல், வெற்றியை உறுதி செய்த நிலையில், வெற்றிக்கு பிறகு, கைகுலுக்கல் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அப்போது கேஎல் ராகுல் மைதானத்தில் நடந்து சென்றபோது லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் அவரது மகன் சஷ்வத் கோயங்காவை சந்தித்துள்ளார். தந்தை-மகன் ஜோடி முன்னாள் எல்எஸ்ஜி வீரரான ராகுலுடன், பேசுவதற்கான மனநிலையில் இருந்தபோதிலும், ராகுல் அவர்களின் ஆர்வத்தை கண்டும் காணாதது போல் சென்றுவிட்டார்.இது தொடர்பான வீடியோக்கள், சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், ராகுல் கோயங்காவுடன் கைகுலுக்கி, பின்னர் மைதானத்தில் நடைப்பயணத்தைத் தொடங்குவதைக் காட்டுகின்றன, இருப்பினும் லக்னோ அணியின் உரிமையாளரும் அவரது மகனும் ராகுலுடன் உரையாடுவதற்காக எதிர்பார்த்தது அவர்களின் உடல் மொழியில் தெரியவந்தது. 3 ஆண்டுகள் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ராகுல், அணியின் உரிமையாளருடனான மோதலை இன்னும் மறக்கவில்லை என்பதால் இவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்காவிற்கு இடையேயான மோதல்தான் ராகுல் ஐபிஎல்லில் தனக்கான மாற்று அணியைதேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம். அணியின் இருந்து தான் வெளியேற காரணமாக இருந்த அந்த சம்பவம் இவர் மனதில் இன்னும் ஆழமாக இருப்பதால் தான், சஞ்சீவ் கோயங்கா உடனான சந்திப்பை அலச்சியப்படுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ராகுல் 130 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை கடந்து மற்றொரு சாதனையை படைத்துள்ளார். இதன மூலம், முன்னாள் டெல்லி வீரர் டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்துள்ளார்.