சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ல் இருந்து விலகிய VJ பிரியங்கா? மாகாபாவுடன் இணைந்த சீரியல் நடிகை..

Published

on

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ல் இருந்து விலகிய VJ பிரியங்கா? மாகாபாவுடன் இணைந்த சீரியல் நடிகை..

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியையும் மாகாபா – பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் விஜே பிரியங்கா, வசி என்பவருடன் திருமணத்தை முடிந்திருக்கிறார்.இதனை தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இனி வருவாரா? இல்லையா? என்று கேள்வி எழுந்து வந்தது.இந்நிலையில், சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வார எபிசோட்டில் பிரியங்காவிற்கு பதில், மாகாபா ஆனந்துடன் சீரியல் நடிகை ஒருவர் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார்.விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மகாநதி சீரியலின் கதாநாயகி நடிகை லட்சுமி பிரியா தான் மாகாபா ஆனந்துடன் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.பிரியங்காவுக்கு இப்போது தான் திருமணமாகியுள்ள நிலையில் அவருக்கு பதில் லட்சுமி பிரியா தொகுப்பாளினியாக இணைந்துள்ளார். நிகழ்ச்சியில் முதல் பிரமோ வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version