இலங்கை

டேன் பிரியசாத் உயிரிழப்பு; பொலிஸார் அறிவிப்பு

Published

on

டேன் பிரியசாத் உயிரிழப்பு; பொலிஸார் அறிவிப்பு

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் இன்று(23)காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(22) இரவு 9:10 மணியளவில் வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டான் பிரியசாத் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு இன்று(23) மீண்டும் அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரே டான் பிரியசாத் மீது மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரது தோளில் இரண்டு துப்பாக்கிச் சன்னங்களும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சன்னங்களும் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது

.

Advertisement

மேலும் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version