சினிமா

நடிகர் நெப்போலியனின் மகனைக் குறிவைத்த யூடியூப் சேனல்களின் ஆட்டத்தை அடக்கிய பொலிஸார்..!

Published

on

நடிகர் நெப்போலியனின் மகனைக் குறிவைத்த யூடியூப் சேனல்களின் ஆட்டத்தை அடக்கிய பொலிஸார்..!

தமிழ் சினிமா உலகில் தனது தனித்துவமான நடிப்பாலும், நேர்மை மிக்க அரசியல் பயணத்தாலும் மக்கள் மத்தியில் சிறந்த இடத்தைப் பிடித்தவர் நடிகர் நெப்போலியன். சமீபத்தில் அவரது மகன் தனுஷ், அக்ஷயா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இத்திருமண நிகழ்வு நேர்த்தியான முறையில் நடந்து கொண்டதுடன் அதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.அதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பரவிய சில அவதூறு வீடியோக்கள், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தவறான தகவல்களை பரப்பி நெட்டிசன்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது.பல்வேறு யூடியூப் சேனல்கள் மூலம் வெளியிடப்பட்ட சில வீடியோக்களில், நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் அவரது மனைவி அக்ஷயாவைப் பற்றிய உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்த அவதூறு பரப்புவதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தனுஷின் தந்தை நெப்போலியன் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையீடு செய்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் பிரிவு உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.அத்துடன் தவறான தகவல்களைக் கொண்ட மற்றும் தனிநபர்களின் மரியாதையை அவமதிக்கும் வீடியோக்கள் என வகைப்படுத்தப்பட்டவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல சேனல்களில் இருந்த வீடியோக்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version