சினிமா

நான் 40 கல்யாணம் பண்ணுவேன், 4 கூட வரல.. ஏன் என்ன அசிங்கப்படுத்துறீங்க!! வனிதா விஜயகுமார்..

Published

on

நான் 40 கல்யாணம் பண்ணுவேன், 4 கூட வரல.. ஏன் என்ன அசிங்கப்படுத்துறீங்க!! வனிதா விஜயகுமார்..

தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இதனை தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்த வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார்.தற்போது பல படங்களில் நடித்து வரும் வனிதா, ராபர்ட் மாஸ்டருடன் மிஸ்டர் அண்ட் மிஸ்ஷஸ் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அலெர்ட் என்ற படத்தின் பிரஸ் மீட்டின் போது திருமணம் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில், நான் 40 திருமணங்கள் கூட செய்வேன், இன்னும் நான்கு கூட செய்யவில்லை, என்னை அசிங்கப்படுத்தாதீங்க. நான் இத்தனை திருமணங்கள் செய்துக்கொள்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தான் தெரியவில்லை.அலெர்ட் படம் பெண்களுக்கான படம் என்று சொன்னார்கள், பெண்களே தவறு செய்தால் அவர்களுக்கும் தண்டனை இருக்கிறது. பெண்கள் என்றால் சில அட்வாண்டேஜ்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சிலர் இதை மிஸ்யூஸ் செய்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.பெண்கள் எந்தத்தவறுமே செய்வதில்லையா? பெண்களை உயர்த்தியே காண்பித்துக்கொண்டிருக்கும் இந்த சமூகமே அவர்கள் செய்யும் தவறையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். அதற்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version