சினிமா

பஹல்காம் கொடூர தாக்குதல்..! இந்தியாவை உலுக்கிய திடீர் சம்பவம்..! நடிகர் சூர்யா வருத்தம்

Published

on

பஹல்காம் கொடூர தாக்குதல்..! இந்தியாவை உலுக்கிய திடீர் சம்பவம்..! நடிகர் சூர்யா வருத்தம்

இந்தியாவிற்கான பாதுகாப்பு சோதனைகள் தொடர்ந்து பெரும் கவலைகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் தாக்குதல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தாக்குதலை கண்ட நடிகர் சூர்யா தனது உணர்வுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.இந்த திட்டமிட்ட கொலையில் சுற்றுலாவிற்கு வந்த 26 சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் முழு இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தீவிரமாக பயங்கரவாதிகளை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்தவர்களிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது சூர்யா x தள பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.குறித்த பதிவில் “பஹல்காம் தாக்குதலை அறிந்து அதிர்ச்சியில் மனமுடைந்து போனேன்; பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்காக பிரார்த்திக்கிறேன் இனி யாருக்குமே இப்படியான துயரம் நடக்கக்கூடாது; இந்தியா எப்போதும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும். அமைதிக்கான நீடித்த பாதை உருவாகட்டும்.” என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version