இலங்கை
பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் சிறுவனின் சடலம் மீட்பு
பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் சிறுவனின் சடலம் மீட்பு
பாதுகாப்பற்ற நீர்க் குழியொன்றுக்குள் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று அம்பாறை, சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நடந்துள்ளது.
சுமார் 3 மணித்தியாலங்களாகச் சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் பொதுமக்களும், பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின்போது பாதுகாப்புக் கமரா ஒன்றில், இனம்தெரியாத நபர் ஒருவர் சிறுவனை அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. சிறுவனை அழைத்துச் சென்ற நபரை அடையாளம் காணமுடியாதுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் தவறி நீர்க்குழிக்குள் வீழ்ந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் சம்மாந்துறைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.