இந்தியா

புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: குற்றவாளிகளை பிடிக்க திணறும் போலீஸ்!

Published

on

புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: குற்றவாளிகளை பிடிக்க திணறும் போலீஸ்!

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவல கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் கவர்னர் மாளிகை, முதல்-அமைச்சர் வீடு. பிரெஞ்சு நூதரகம். கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது.தொடர்ந்து கடந்த வாரத்தில் நட்சத்திர விடுதிகள், ரெஸ்டாரண்ட்டுகள் ஆகியவற்றுக்கும் வெடிருண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது. போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் தொடர் கதையாகி உள்ளது.வெடிகுண்டு மிரட்டல் நபரை போலீசார் கண்டறிய முடியவில்லை. புதுவை சைபர் கிரைம்போலீசாரால் துப்புதுலக்க முடிவில்லை. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர். மீண்டும் வெடிகுண்டு இந்த நிலையில் இன்று கவர்னர் புதுச்சேரி மாளிகைக்கு இமெயிலில் ஒரு தகூல் வந்தது. அதில், கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என தகவல் இருந்தது.இதுகுறித்து பெரியக் பெரிய கடை காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. போலீசார் மோப்ப நாயுடன் வந்து சோதனையிட்டனர் . சோதனையில், ஒன்றுமில்லை என தெரிந்தவுடன் இதுவும் வதந்தி என போலீசார் கூறிவிட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை கடற்கரை சாலையில் உள்ள கலாச்சார மையத்தில் கணபதி ஹோமம் நடந்தது. இதனால் கவர்னர் கைலாசநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர். கவர்னர் மாளிகை அதிகாரிகள் தற்காலிக கவர்னர் மாளிகையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version