சினிமா

பெண்களை தூக்கி வைக்காமல்; தவறுகளையும் சுட்டிக்காட்டுங்கள்; வனிதா அதிரடி

Published

on

பெண்களை தூக்கி வைக்காமல்; தவறுகளையும் சுட்டிக்காட்டுங்கள்; வனிதா அதிரடி

சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு என்று கூறப்படும் சூழலில், பல திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களின் பார்வையை ஆதரித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அடக்குமுறைகளை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்றன.ஆனால், பெண்கள் செய்யும் தவறுகள், அவர்களால் உருவாகும் பாதிப்புக்கள் குறித்த  படங்கள் மிகவும் குறைவாகவே உருவாகின்றன. இந்நிலையில், “அலர்ட்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது கொண்டது. இதில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார், தன்னுடைய சமூகப் பார்வையில் அதிரடியாகப் பல கருத்துக்களைத் தெரிவித்து ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.விழாவின் போது வனிதா, “நீதி, சமத்துவம் பற்றிப் பேசும் இந்த சமூகத்தில், பெண்களை மட்டும் தூக்கி வைத்துப் பேசுவது தப்பான கலாச்சாரம். பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதனால் அவர்கள் மீது கருணையான பார்வை இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யும் தவறுகளையும் சினிமா சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.” என்று கூறியிருந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version