சினிமா
’பொண்டாட்டி கிட்ட தோத்து போங்க’.. தனது கணவர் குறித்து பேசிய நடிகை ரோஜா
’பொண்டாட்டி கிட்ட தோத்து போங்க’.. தனது கணவர் குறித்து பேசிய நடிகை ரோஜா
ரோஜா தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். இவர் இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்த நிலையில், நடிகை ரோஜா சமீபத்தில் விருது விழா மேடை ஒன்றில் தனது கணவர் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அவர் கூறியதாவது “நான் தான் எப்பவுமே சண்டை போடுவேன். செல்வமணி சார் எப்பவுமே சண்டை போட மாட்டார். கோபம் வந்ததுன்னா சீரியஸா ரூமுக்குள்ள போய் கதவை மூடிப்பார். கோபம் குறைந்தது பிறகுதான் வெளியே வருவார்.ஏன்னா, அவர் திட்டினா நான் அழுவேன். அப்புறம் என்னை சமாதானம் படுத்தனும். இதெல்லாம் எதுக்குன்னு அவருக்கு தெரியும். வாழ்க்கையில ஜெயிக்கணும்னு நினைச்சா பொண்டாட்டி கிட்ட தோத்துப் போங்க. பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டா வீட்டுல சண்டை போட்டுக்கிட்டே தான் இருக்கணும். வெளியே போய் ஜெயிக்க முடியாது” என கூறியுள்ளார்.