இலங்கை

போப் இன் இறுதிச்சடங்கில் கொழும்பு பேராயர் ; இத்தாலிக்கு பயணம்

Published

on

போப் இன் இறுதிச்சடங்கில் கொழும்பு பேராயர் ; இத்தாலிக்கு பயணம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (23) காலை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார்.

Advertisement

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 09.30 மணியளவில் அபிதாபி சென்று பின்னர் அங்கிருந்து மற்றுமொரு விமானம் ஊடாக இத்தாலிக்கு செல்ல உள்ளார்.

பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் 23 ஆம் திகதி புதன்கிழமை வத்திக்கான் நேரப்படி காலை 9 மணிக்கு சென் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் வரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக வத்திகான் அறிவித்துள்ளது.

பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் மரணம் உலக மக்களிடையே தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அதேவேளை அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பெரும் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version