இலங்கை
மாத்தறை சிறைச்சாலை மோதல் : கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்
மாத்தறை சிறைச்சாலை மோதல் : கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கிருந்த கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை 250 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு மோதலை கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து சிறைச்சாலைக்கு சிறப்பு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.