இலங்கை

யாழில் பிறந்து 5 மாதங்களேயான குழந்தை பலி; துயரத்தில் பெற்றோர்

Published

on

யாழில் பிறந்து 5 மாதங்களேயான குழந்தை பலி; துயரத்தில் பெற்றோர்

  யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக நேற்று (22) உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

குறித்த குழந்தைக்கு திங்கட்கிழமை (21) காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

குழந்தைக்கு காய்ச்சல் குணமாகாத நிலையில் நேற்று (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (22) மாலை குழந்தை உயிரிழந்தது.

Advertisement

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version