சினிமா

“ரெட்ரோ” இசை வெளியீட்டில் விஜயை நக்கலடித்த தொகுப்பாளினி பாவனா..! எதற்காகத் தெரியுமா..?

Published

on

“ரெட்ரோ” இசை வெளியீட்டில் விஜயை நக்கலடித்த தொகுப்பாளினி பாவனா..! எதற்காகத் தெரியுமா..?

“ரெட்ரோ” இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து கொண்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா சாதாரணமாக கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.அந்த நிகழ்ச்சியின் போது சூர்யா, கல்வியில் வெற்றி பெறாதவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெறமுடியும் என்று கூறியதுடன் தான் பல மாணவர்களின் கல்விக்கு உதவுவதாகவும் கூறியிருந்தார். அந்தநேரம் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பாவனா, சூர்யாவைப் பாராட்டுவதாக எண்ணிக் கூறிய ஒரு வசனம் தற்போது சர்ச்சையைத் தூண்டியுள்ளது.மேலும் சூர்யா, “நான் படிப்பில் வெற்றி பெறவில்லை. ஆனால் என் வாழ்வில் ஒரு லட்சியம் இருந்தது. அந்த லட்சியம் தான் என்னை இன்றைக்கு இத்தனை உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற ஆசைப்படுகிற நீங்கள், உங்கள் கனவுகளுக்காக போராடுங்கள். தோல்வி வந்தால் தான் வாழ்க்கையின் அனுபவம் புரியும்.” எனவும் கூறியிருந்தார்.சூர்யாவின் பேச்சுக்குப் பிறகு மேடையில் பாவனா, “சூர்யாவ என்ன screenல வாற reel ஹீரோனு நினைச்சிட்டீங்களா..?அவர் ஒரு family man என்றதுடன் அவர் உண்மையிலேயே ஒரு real ஹீரோ!” எனக் கூறினார். இந்த வார்த்தைகள் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதுடன், சில தரப்பில் மறைமுகமாக நடிகர் விஜயை குறிக்கின்றார் எனும் குற்றச்சாட்டும் எழுந்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version