இலங்கை
2025 அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்
2025 அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் தொடர்ந்து வீட்டில் செல்வம் பெருகும், நிறைய தங்கம் வாங்கும் யோகம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
இந்துக்கள் இந்த நாளை மங்களகரமான நாளாகவும், மங்கலப் பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற நாளாகவும் கருதுகின்றனர்.
வசதி இல்லாதவர்கள் மகாலட்சுமி வசிக்கும் பொருளாக கருதப்படும் உப்பு, மல்லிகை போன்ற வெள்ளை நிறத்தால் ஆன மங்கலப் பொருட்களை வாங்கியும் வழிபடலாம்.
சமஸ்கிருதத்தில் அட்சய என்றால் ‘அள்ள அள்ள குறையாதது’ மற்றும் திருதியை என்றால் ‘மூன்றாவது’ என்று அர்த்தம். அதாவது, அமாவாசை நாளினையும், பூரணை நாளினையும் அடுத்து வரும் மூன்றாவது திதி திருதியை ஆகும்.
2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30ம் திகதி புதன்கிழமை வருகிறது. ஆனால், ஏப்ரல் 29 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 05:31 மணிக்கே திருதியை திதி துவங்கி விடும். ஏப்ரல் 30ம் திகதி மதியம் 02:12 வரை மட்டுமே திருதியை திதி உள்ளது.
ஏப்ரல் 30-ம் தேதியே சூரிய உதய காலத்தில் திருதியை திதி உள்ளதால் அன்றைய தினமே அட்சய திருதியை நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், அனைவராலும் தங்கம் வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
எனவே, இந்த நன்னாளில் தங்கம் தவிர, தங்க நாணயங்கள், வெள்ளி, பாத்திரங்கள் போன்ற பொருட்களையும் அட்சய திருதியை நாளில் வாங்கலாம். தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாக ஏப்ரல் 30-ம் காலை 05:40 முதல் ஏப்ரல் 30-ம் திகதி மதியம் 12:18 வரை சொல்லப்படுகிறது.
அட்சய திருதியை அன்று வஸ்திர தானம் செய்வது நல்லது. அன்னதானம் கொடுப்பதும் சிறப்பு. அத்துடன் அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும்.
அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று நம்பப்படுகிறது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுப்பது நல்லது.