சினிமா
3 சர்ஜரி பண்ணி இருக்கேன்..உடம்பு குறைக்க இதான் காரணம்!! பிரபல நடிகை குஷ்பூ..
3 சர்ஜரி பண்ணி இருக்கேன்..உடம்பு குறைக்க இதான் காரணம்!! பிரபல நடிகை குஷ்பூ..
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் அரசியலில் ஈடுபட்டும் வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் உடல் எடையை குறைக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.அதில், எனக்கு ஸ்வீட்ஸ் என்றால் ரொம்பவே பிடிக்கும். எங்கேயாவது ஸ்வீட்ஸ் பார்த்தால் எடுத்து சாப்பிட்டுவிடுவேன். எடையை குறைப்பேன், இதனால் உடல் எடை இரு மடங்கு அதிகமாகிவிடும்.அப்போது நானே என் உடல் பற்றி புரிந்து கொண்டேன். சுகர் கிடையாது, பிபி கிடையாது ஆனா என்ன, முட்டி பிரச்சனை இருக்கு, ஏற்கனவே முட்டியில் அடிப்பட்டதால் பிரச்சனை இருக்கு, 3 முறை சர்ஜரி நடந்திருக்கு. அப்போ டாகடர் சொன்னாங்க, முட்டிக்காக உடம்பை குறைக்க வேண்டும்.அதன்பின் தினமும் நடப்பது, குறைவாக சாப்பிடுவது என்று ஆரம்பித்தேன். சென்னையில் இருக்கும் போது தினமும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி நடப்பேன். ஸ்வீட்ஸ் சாப்பிடுறது கிடையாது. ஒரு வேலை சாப்பிடுவதற்கு பதில் அதையே 6 முறை பிரித்து சாப்பிடுவேன்.இதை நம்ம்மை நாம் பார்க்கும் போது எல்லோரும், குஷ்பூ இட்லீ மாதிரி இருந்தால் தான் நல்லா இருக்கும், ஆனால் அதன்பின் இருக்கும் சிக்கல் என்ன என்பது அப்புறம் தான் தெரியும் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.