சினிமா

அடடே இப்படியும் ஜோடி இருக்காங்களா..!52 வருடத்திலும் மாறாத காதலுடன் ஜொலிக்கும் இயக்குநர்!

Published

on

அடடே இப்படியும் ஜோடி இருக்காங்களா..!52 வருடத்திலும் மாறாத காதலுடன் ஜொலிக்கும் இயக்குநர்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர்களில் எஸ்.ஏ. சந்திரசேகர் முக்கியமானவர் ஆவார். தனது வாழ்க்கையில் பல கதைகளை உருவாக்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தார். அத்தகைய மாமனிதர் பற்றிய தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.அந்தத் தகவல் என்னவென்றால், ஏப்ரல் 26 அன்று இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் அவர்களின் 52வது திருமண நாளை நினைவுகூரும் சிறப்புநாளைக் கொண்டாடவுள்ளனர். அந்த நாளை மறக்க முடியாத தருணமாக மாற்றுவதற்காக இன்றைய தினம் மனைவிக்கு BMW கார் ஒன்றை பரிசளித்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.திருமண நாள் பரிசு என்பது வெறும் பொருள் அல்ல, அது ஒருவரின் மனதில் பதியும் இன்பநினைவாகும். அந்த வகையில், எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மனைவிக்கு BMW காரை பரிசளித்துள்ளதனை தற்பொழுது அனைவரும் பாராட்டியுள்ளனர். புதிதாக வாங்கப்பட்ட அந்தக் காரின் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உலகமெங்கும் காதல் பற்றிப் பலர் பேசினாலும் 52 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது காதலின் ஆழத்தில் கொஞ்சமும் மாறுபடாமல் இருக்கின்ற ஜோடிகளில் தற்பொழுது இவர்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version