இலங்கை
இலங்கையில் மத நல்லிணக்கத்தின் அடையாளம்; வெளியான காணொளி!
இலங்கையில் மத நல்லிணக்கத்தின் அடையாளம்; வெளியான காணொளி!
கண்டியில், ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதனால் இரு நாட்கள் கண்டிக்கு பகதர்கள் வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை காண சென்ற பௌத்த பக்தர்கள் குழு உள்ளூர் முஸ்லிம் மசூதிக்குள் ஓய்வெடுக்கும் காட்சியைக் காண முடிந்தது.
வருடாந்திர “சிறி தலதா வந்தனாவ” விழாவிற்காக கண்டி நகரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவதால், கண்டி நகரம் கடுமையாக நெரிசலில் சிக்கியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சில யாத்ரீகர்கள் வரிசையில் இரவைக் கழிக்க வேண்டியுள்ளது.
மசூதிக்குள் பக்தர்கள் நிம்மதியாக தூங்குவது போன்ற படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு, மத எல்லைகளுக்கு அப்பால் இரக்கம் மற்றும் ஒற்றுமையைக் காட்டிள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.