நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 24/04/2025 | Edited on 24/04/2025
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே தனது மகன் விஜய்யின் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பட நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளிலும் அவ்வபோது கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 52வது ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகிறார். இவர் பாடகி மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஷோபாவை 1973ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஷோபாவுக்கு விலையுயர்ந்த பி.எம்.பிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார். திருமண நாள் பரிசாக வாங்கி கொடுத்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். மேலும் கார் டெலிவரி செய்யும் தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து “உண்மையான காதல் ஒருபோதும் குருடாகாது, மாறாக கூடுதல் வெளிச்சத்தைக் கொண்டுவரும்” என்று குறிப்பிட்டு இன்னொரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் தனது திருமண வாழ்க்கை குறித்தும் ஷோபாவுக்கு பரிசு வழங்கியது குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இந்த 52 வருஷத்தில் எவ்ளோவோ பிரச்சனைகள், டார்ச்சர்கள்… அத்தனையும் தாங்கிக்கொண்டு ஒரு பெண் என்னோடு வாழ்ந்திருக்கிறார். கல்யாணம் ஆன புதிதில் பரிசு வாங்கி கொடுப்பது சாதாரணமான ஒன்று. ஆனால் இப்போது என் மனைவிக்கு விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ் கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறேன்” என்றுள்ளார்.
…true love is never blind, but rather brings an added light. pic.twitter.com/bSJ9lQ6DPg
— S A Chandrasekhar (@Dir_SAC) April 24, 2025
<!–
–>
<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
–>