இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது

5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து குறித்த போதைப்பொருளை கடத்துவதற்கு முயற்சித்த நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இந்தியாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த அவர், தமது பயணப்பையில் பல்வேறு பொதிகளில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version