சினிமா
சுந்தர்.சியின் உழைப்புக் கிடைத்த வெற்றியே” கேங்கர்ஸ்”..! நெகிழ்ச்சியில் நடிகை குஷ்பு!
சுந்தர்.சியின் உழைப்புக் கிடைத்த வெற்றியே” கேங்கர்ஸ்”..! நெகிழ்ச்சியில் நடிகை குஷ்பு!
தமிழ் சினிமாவில் புதிய பரிணாமத்தில் இறங்கியுள்ள இயக்குநர் சுந்தர்.சி தற்பொழுது காமெடி கிங் வடிவேலை திரையில் மீண்டும் கேங்கர்ஸ் படம் மூலம் ஒளிரச்செய்துள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே முக்கியமான திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டனர். படம் திரையிடப்பட்ட பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை குஷ்பு கலந்து கொண்டு, தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். அதன்போது குஷ்பு கூறியதாவது, “இந்த வெற்றி, ஒவ்வொருவருடைய உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்றதுடன் எங்களுக்குள் இருந்த ஒற்றுமை மற்றும் புரிதல் என்பன தான் இதை சாத்தியமாக்கியது. வடிவேல் அண்ணாவும், சுந்தர்.சியும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்ததை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.” என்றார்.மேலும் , “ சுந்தர். சி எப்படியெல்லாம் பல நேரங்களில் போராடி இந்த படத்துக்கான இடத்தை வென்றார் என்பதையும், வடிவேலு அண்ணா எவ்வளவு மன உறுதியுடன் மீண்டும் திரையில் எழுந்து நிற்கிறார் என்பதையும் நான் நேரில் பார்த்தவள்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.