இலங்கை

டேன் பிரியசாத் கொலையின் பிரதான சந்தேகநபர் கைது

Published

on

டேன் பிரியசாத் கொலையின் பிரதான சந்தேகநபர் கைது

  சமூக செயல்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டேன் பிரியசாத் கொல்லப்பட்டார்.

Advertisement

வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இரவு 9.10 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version