சினிமா

நடிகையிடம் அத்து மீறிய புகாரில் சிக்கிய ஷைன் டாம் சாக்கோ! நடிகர் சங்கம் எடுத்த நடவடிக்கை..

Published

on

நடிகையிடம் அத்து மீறிய புகாரில் சிக்கிய ஷைன் டாம் சாக்கோ! நடிகர் சங்கம் எடுத்த நடவடிக்கை..

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஷைன் டாம் சாக்கோ, சமீபத்திய நாட்களில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்தவகையில் சமீபத்தில் ஒரு நடிகையிடம் நடந்த அத்துமீறல் நடவடிக்கை திரைத்துறையையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களின் படி, அந்த நடிகையிடம் தவறாக  நடந்து கொண்டதாகவும் அந்நடிகையின் அனுமதியின்றி ஷைன் டாம் செயல்பட்டதாகவும் புகார் எழுந்திருந்தது.சம்பவம் நடைபெற்றதனைத் தொடர்ந்து, தற்பொழுது ஷைன் டாம் சாக்கோ அந்நடிகையிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த விடயத்தில் நடிகை எந்தவிதமான காவல்துறை புகாரும் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த விவகாரம் குறித்து தற்போது நடிகர் சங்கம் மற்றும் துறைசார் அமைப்புகளின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் நிலையில் உள்ளது.நடிகை தற்போது இந்த சம்பவம் பற்றிய கருத்துக்களை காவல்துறைக்கு வழங்கவில்லை என்பதால், கூட்டாகப் பேசி இச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஷைன் டாம் சாக்கோ மீது ஏற்கனவே ஒரு போதைப்பொருள் வழக்கு பதிந்திருப்பதும், அந்த வழக்கு தொடர்பான விசாரணை இப்பொழுதும் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version