இந்தியா

பஹல்கம் அதிர்ச்சி அடங்குமுன் காஷ்மீரில் மீண்டும் பயங்கர மோதல்: ராணுவ வீரர் மரணம்

Published

on

பஹல்கம் அதிர்ச்சி அடங்குமுன் காஷ்மீரில் மீண்டும் பயங்கர மோதல்: ராணுவ வீரர் மரணம்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் புல்வெளியில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.கடந்த பல ஆண்டுகளில் காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.இதனிடையே, பஹல்கம் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கர் அருகே பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகள் குழுவுக்கும் இடையே இன்று காலை (வியாழக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சில நாட்களாக அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தேடுதல் குழுவினர் பெரோலே பகுதிக்கு சென்றபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.இந்த பகுதி பசந்த்கரில் இருந்து சுமார் மூன்று மணி நேர நடைபயண தூரத்தில் உள்ளது. கோடை மாதங்களில் கால்நடைகளை மேய்ப்பதற்காக நாடோடிகளால் இப்பகுதி பயன்படுத்தப்படுகிறது.இந்த சம்பவம் நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக, வடக்கு காஷ்மீரின் உரி செக்டாரில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் ஒரு நீரோடை வழியாக பள்ளத்தாக்கிற்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் குழுவை ராணுவம் புதன்கிழமை அதிகாலை கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியது.துருப்புக்கள் ஊடுருவ முயன்றவர்களை எச்சரித்தபோது, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.செவ்வாய்க்கிழமை பஹல்கம் தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் குதிரை வண்டிக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஊடுருவல்காரர்களுக்கான தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.  Read in English: 1 soldier killed as encounter breaks out in Udhampur, 2 days after Pahalgam attack

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version