இலங்கை

விமானத்தில் அந்தரங்க பகுதிய காட்டிய வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கு தண்டம்!

Published

on

விமானத்தில் அந்தரங்க பகுதிய காட்டிய வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கு தண்டம்!

 விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் தன்னுடைய மர்ம பகுதியை காண்பிக்க முயற்சித்த வெளிநாட்டு பிரஜைக்கு 26 ஆயிரத்துக்கு 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் அந்தங்க பகுதை காட்டி நடனமாடி, பெண்ணை தொந்தரவு செய்ய முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 65 வயதான ஸ்வீடன் பிரஜைக்கு இவ்வாரு நீதிம்ன்றம் தண்டம் விதித்துள்ளது.

Advertisement

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல இன்று (24) தண்டம் விதித்தார். அந்த தண்டத்தை செலுத்த தவறினால், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என கட்டளையிட்டார்.

சந்தேகநபர், வியாழக்கிழமை (24) நீதிமன்றில் ஆஜராகி, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சுவீடன் பிரஜையான இவர், இலங்கையில் பிறந்தவர் என அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து முறைப்பாடு செய்த பணிப்பெண்ணின் சார்பில், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார், முறைப்பாட்டாளர் நஷ்டஈட்டை எதிர்பார்க்கவில்லை என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version