விளையாட்டு
RCB vs RR Live Score Update: சொந்த மண்ணில் ஃபார்முக்கு திரும்புமா ஆர்.சி.பி? ராஜஸ்தான் அணியுடன் மோதல்
RCB vs RR Live Score Update: சொந்த மண்ணில் ஃபார்முக்கு திரும்புமா ஆர்.சி.பி? ராஜஸ்தான் அணியுடன் மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.ஆங்கிலத்தில் படிக்க: RCB vs RR LIVE Cricket Score, IPL 2025: Toss and playing XI coming from Bengaluru8 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகள் பெற்றுள்ள புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி, நடப்பு சீசனில் சொந்த மண்ணில், விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது, இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அந்த அணியின் பந்துவீச்சார்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள், சொந்த மண்ணில் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில், 8வது இடத்தில் இருக்கும் ராயல்ஸ் அணி, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஅப் வாய்ப்பை பெற முடியும். டெல்லி கேபிடல்ஸஸ அணிக்கு எதிரான ஆட்டத்தில், காயமடைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது ராஜஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், ரியான் பராக் கேப்டனாக பொறுப்பேற்கிறார், மேலும் சொந்த மண்ணில் பெங்களூர் அணியின் மோசமான ஃபார்மைப் ராஜஸ்தான் அணி பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது.