இலங்கை

கண்டி வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் மரணம்; 420 பேர் மருத்துவமனையில்

Published

on

கண்டி வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் மரணம்; 420 பேர் மருத்துவமனையில்

  வரலாற்று புகழ் பெற்ற கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண்மணி முச்சக்கரவண்டியொன்று மோதியதில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

உயிரிழந்தவர்கள் குளியாப்பிட்டிய, பண்டாரகம, கலிகமுவ மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அம்பிட்டிய பகுதியில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் ஆணொருவரும், கட்டுக்கஸ்தோட்டை நகருக்கு அருகில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த அனைவரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

Advertisement

இதற்கிடையில், கண்டி போதனா வைத்தியசாலையில், கடந்த சில தினங்களில் சுகவீனமுற்ற 420 யாத்திரிகர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

கண்டியில், ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திக்கின்றனர்.

இந்நிலையில் , ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை காண சென்ற பௌத்த பக்தர்கள் குழு உள்ளூர் முஸ்லிம் மசூதிக்குள் ஓய்வெடுக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version