சினிமா
சிக்ஸ் பேக் வைத்தது சூர்யா இல்ல தனுஷ்; சிவகுமாரின் கருத்துக்குப் பதிலடி கொடுத்த விஷால்!
சிக்ஸ் பேக் வைத்தது சூர்யா இல்ல தனுஷ்; சிவகுமாரின் கருத்துக்குப் பதிலடி கொடுத்த விஷால்!
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் தான் சூர்யா. இவர் திரையுலகில் சிறப்பான கதைகளைத் தேர்வுசெய்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். தற்பொழுது சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ‘ரெட்ரோ’. இந்தப் படம் மே 1ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புக்கள் மூலம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.‘ரெட்ரோ’ திரைப்படம் 80s மற்றும் 90s காலச் சூழலை அடிப்படையாகக் கொண்டதாக உருவாகின்றது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன் மற்றும் நந்திதா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இது ஒரு பெரிய கமர்ஷியல் படமாக மட்டுமல்லாமல், சூர்யாவின் ரசிகர்கள் அனைவருக்கும் தனிச்சுவை தரும் படமாக இருக்கப் போகின்றது என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சிவகுமார், தனது மகன் சூர்யாவைப் பற்றி பேசியபோது கூறிய சில வரிகள் தற்பொழுது வைரலாகி உள்ளன. அதன்போது அவர் கூறியதாவது, “என் மகன் சூர்யா தான் தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் கொண்டு திரைக்கு வந்த முதல் நடிகர். அதை விட முன்னால் யாராவது இருந்தாங்களா?” என்று கேட்டிருந்தார். இந்த உரையின் பின்னணியில், அவர் தனது மகனைப் பற்றிய பெருமையைச் சுட்டிக்காட்ட முற்பட்டிருந்தாலும், அந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் மிகுந்த விமர்சனத்தையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.இந்த சர்ச்சையைத் தொடர்ந்து இதைப்பற்றி நடிகர் விஷாலிடம், சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு, “முதல் முறையாக சிக்ஸ் பேக் கொண்டு வந்தவர் தனுஷ் தான் என்றதுடன் ‘பொல்லாதவன்’ படத்தில் அவர் அப்படி நடித்திருந்தார். பிறகு நானும் ‘சத்யம்’, ‘மதகஜராஜா’ ஆகிய படங்களுக்காக சிக்ஸ் பேக் வைத்தேன்.” என்று கூறியிருந்தார்.