இந்தியா

பஹல்காம் தாக்குதலை ஆதரித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகி; செல்வகணபதி எம்.பி கண்டனம்

Published

on

பஹல்காம் தாக்குதலை ஆதரித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகி; செல்வகணபதி எம்.பி கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை ஆதரித்து கருத்துத் தெரிவித்த புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிக்கு, பா.ஜ.க எம்.பி செல்வகணபதி. கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக புதுச்சேரி பா.ஜ.க ராஜய்சபா எம்.பி செல்வ கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;புதுச்சேரி, மாஹே தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜிலேஷ், ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை ஆதரித்து, வெறுப்பு பிரசாரம் செய்யும் நோக்கத்தில் பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டார். இது குறித்து மாஹே பாரதிய ஜனதா அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாஹே போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதிகளை ஆதரிப்பதே காங்கிரசின் வழக்கமாக இருக்கிறது. அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் காங்கிரசின் குணம். 2009 முதல் 13ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் 15 மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. ஆனால், 2014ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மோடியைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் கப் சிப் ஆனார்கள். இப்போது மீண்டும் லேசாக வாலாட்டத் தொடங்கி உள்ளனர். பயங்கரவாதிகளைத் தேடிக் கண்டுபிடித்து கற்பனைக்கு எட்ட முடியாத தண்டனை கொடுப்போம் என பிரதமர் மோடி இன்று பீகாரில் உறுதிபட சொல்லி இருக்கிறார். பயங்கரவாதிகளை ஆதரிப்பதை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி தேசத்தின் பக்கம் நின்று, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செல்வகணபதி எம்.பி தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version