இலங்கை

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் ஹரிணி இரங்கல்

Published

on

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் ஹரிணி இரங்கல்

  இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, உலக கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் பிரதன்மர் தெரிவித்தார்.

Advertisement

இதன்போது இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, கத்தோலிக்க சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான திருத்தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் அப்போஸ்தலிக் பிரதிநிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) காலையில் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version