சினிமா

மனைவியுடன் பிக் பாஸ் ஷாரிக் வெளியிட்ட பேபி பம்ப் வீடியோ.. இணையத்தில் ட்ரெண்டிங்

Published

on

மனைவியுடன் பிக் பாஸ் ஷாரிக் வெளியிட்ட பேபி பம்ப் வீடியோ.. இணையத்தில் ட்ரெண்டிங்

வெள்ளித்திரையில் பிரபல நட்சத்திர ஜோடியாக ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் வலம் வருகிறார்கள். இந்த ஜோடிக்கு ஷாரிக் ஹாசன் என்ற ஒரு மகன் உள்ளார்.இவர்களுடைய மகன் நடிகர் ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். கடந்த ஆண்டு மரியா ஜெரிப்ஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. ஜெரிப்ஃபருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.திருமணத்திற்கு பின் தனது மனைவி ஜெனிஃபர் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்தார் ஷாரிக்.இந்த ஜோடிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது தற்போது கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியுடன் பேபி பம்ப் தெரியும் வகையில் ஒரு போட்டோஷூட் நடத்தி அதன் வீடியோவை ஷாரிக் பகிர்ந்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version