இலங்கை
யாழ் நயினாதீவு புண்ணிய பூமியில் கோஸ்டி மோதல்; நடந்தது என்ன?
யாழ் நயினாதீவு புண்ணிய பூமியில் கோஸ்டி மோதல்; நடந்தது என்ன?
யாழ்ப்பாணம் நயினாதீவு துறைமுகப்பகுதியில் கடந்த ஏப்ரல்22 ம் திகதி மாலை ஏற்பட்ட தொழில்தகராறினால் , வாய்த்தர்க்கம் வலுவடைந்து அடிதடியாக மாறியுள்ளது.
இந்த சம்பவத்தில் காணாமல் போன குறித்த இளைஞர் மன்னார் பகுதியை சேரந்தவர் எனவும் நயினாதீவில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரிவருகின்றது.
சம்பவம் தொடர்பில் CCTV பதிவுகளின் படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஐவரை பொதுமக்கள் பிடித்து அடைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் சந்தேக நபர்களை கையளிக்க பொதுமக்கள் தயக்கம் வெளியிட்டுவந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் , மக்களுக்கும் இடையே ஏற்பட்ட சமரசத்தின் படி பிடித்து வைத்திருந்தவர்களை பொலிசார் கைதுசெய்து ஊர்காவற்றுறைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில் நயினை அம்மன் ஆலய பகுதியில் இருந்து காணாமல் போன இளைஞர் வெளிப்பட்டுள்ளார்.
இதனையடுத்து , ஏற்கெனவே கைது செயயப்பட்டவர்களுடன் , காணாமல் போன இளைஞரையும் கைதுசெய்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டுசென்றுள்னர்.