சினிமா
வசூல் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
வசூல் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படம் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் வசூலில் சக்கப்போடு போடும் GBU திரைப்படம் 15 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.இந்த நிலையில், 15 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ. 248 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் மிகப்பெரிய லாபமும் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.