இலங்கை
அட்சய திருதியையில் மறந்தும் கூட இந்த 4 பொருட்களை மட்டும் தானம் கொடுத்து விடாதீர்கள்
அட்சய திருதியையில் மறந்தும் கூட இந்த 4 பொருட்களை மட்டும் தானம் கொடுத்து விடாதீர்கள்
அட்சய திருதியை என்பது செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் பெருகுவதற்கான நாளாகும். அன்று சில பொருட்களை தானம் செய்வது அதிர்ஷ்டம் தரும் என்றாலும், சிலவற்றை தானம் செய்தால் துரதிர்ஷ்டம் வரும். அந்த பொருட்களை தானம் செய்தால் வீட்டில் செல்வம் குறைந்து, லட்சுமி தேவியின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. அன்று சில பொருட்களை தானம் செய்வது நல்லதல்ல. அப்படி செய்தால், வீட்டில் இருக்கும் லட்சுமி தேவி மற்றும் செல்வம் போய்விடும். எனவே, அன்று என்ன தானம் செய்யக்கூடாது என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
உடைந்த பொருட்களை தானம் செய்வது நல்லதல்ல. குறிப்பாக அக்ஷய திருதியை அன்று அப்படி செய்தால், வீட்டில் கெட்ட சக்தி வரும். நஷ்டம் ஏற்படும். வளர்ச்சி இருக்காது.
வாஸ்துபடி, அக்ஷய திருதியை அன்று பால் தானம் செய்தால், லட்சுமி தேவி வீட்டில் இருந்து போய் விடுவார். வீட்டில் செல்வம் குறைந்துவிடும்.
அக்ஷய திருதியை அன்று மாலை நேரத்திற்கு பிறகு பணம் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது. அப்படி செய்தால், பணம் நஷ்டம் ஏற்படும். வாழ்க்கையில் நிலையான வருமானம் இருக்காது.
அக்ஷய திருதியை அன்று கூர்மையான பொருட்களை தானம் செய்தால், குடும்பத்தில் சண்டை வரும். அன்புக்குரியவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். ஒற்றுமை இருக்காது.