இலங்கை

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை பணம் ; IMF வெளியிட்ட அறிவிப்பு

Published

on

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை பணம் ; IMF வெளியிட்ட அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05 ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது.

Advertisement

தமது அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு விடயங்களை ஆராய்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

அத்துடன், கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளமையினால் 5ஆம் தவணையை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version