சினிமா

காவல் பட இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்..

Published

on

காவல் பட இயக்குநர் நாகேந்திரன் மாரடைப்பால் மரணம்..

தமிழ் சினிமா ரசிகர்களை சமீபகாலமாக பிரபலங்களின் மரணம் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. சமீபத்தில் கூட பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.தற்போது ஒரு முக்கிய இயக்குநர் ஒருவரின் மரணம் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விமல், சமுத்திரகனி நடிப்பில் உருவாகி 2015ல் வெளியான காவல் படத்தினை இயக்கியவர் இயக்குநர் நாகேந்திரன்.பல இயக்குநர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நாகேந்திரன், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, பிரியாணி, தம்பி உள்ளிட்ட படங்களில் ஒருசில ரோலில் நடித்துள்ளார்.இந்நிலையில் நாகேந்திரனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் இறப்பை அறிந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு வேதனையுடம் இரங்கல் பதிவினை பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version