இலங்கை

கிழக்கில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

Published

on

கிழக்கில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய அம்பாறை – சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட உணவகத்தில் வெள்ளிக்கிழமை (25) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Advertisement

குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே உங்களது முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு அறியத்தாருங்கள் QR code ஊடாக வழங்கப்படும் பட்சத்தில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version