சினிமா
சூர்யா சிக்ஸ்பேக் விவகாரம்!! சிவக்குமார் பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை..
சூர்யா சிக்ஸ்பேக் விவகாரம்!! சிவக்குமார் பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை..
மூத்த நடிகரும் சூர்யா – கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார், ரெட்ரோ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூர்யாவை பற்றி பாராட்டி பேசினார்.அதில், படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா தான் என்று சிவக்குமார் பேசியிருந்தார். இந்த விஷயம் பெரியளவில் ட்ரோல் ஆன நிலையில், முதல் சிக்ஸ்பேக் வைத்த நடிகர் தனுஷ் தான் என்று விஷால் பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார்.இந்நிலையில் நடிகை உமா ரியாஸ் கான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மை மேன் என்று கேப்ஷனுடன் தனது கணவர் ரியாஸ் கான் சிக்ஸ்பேக் வைத்திருக்கும் வின்னர் பட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.சரத்குமாரின் இந்த பேச்சுக்குத்தான் உமா ரியாஸ் கான் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று அந்த பதிவில் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.