இந்தியா

பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாது: ஜல்சக்தி அமைச்சர் உறுதி!

Published

on

பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாது: ஜல்சக்தி அமைச்சர் உறுதி!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளது. சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாம் பார்த்துக் கொள்வோம் என்று ஜல்சக்தி அமைச்சர் பாட்டீல் கூறினார்.காஷ்மீரின் பகல்காமில் ஏப். 22 சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு மாநில சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். இன்னும் பல பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லக்சர் இ-தொய்பாவின் துணை அமைப்பான The Resistance Front பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானியர்களுடன் தொடர்பிருக்கும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து நதி நீரை நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனலாம். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Not a drop of water to Pakistan, says Jal Shakti Minister இந்திய நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குள் தண்ணீா் பாய்வதைத் தடுப்பதற்கான உத்திகளை வகுக்க, டெல்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் உயா்நிலை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய  ஜல்ஜக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் 3 விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்குள் தண்ணீா் பாய்வதைத் தடுக்க இந்தியாவில் விரைவில் நதிகளை தூா்வாரி, நீரை திசைதிருப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாட்டீல் கூறினாா்.அவரது பதிவில், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மோடி அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு முற்றிலும் நியாயமானது மற்றும் தேசிய நலனுக்கானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?இந்தியா-பாகிஸ்தான் இடையில் பாயும் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதற்காக செப்டம்பர் 19, 1960 அன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது. சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்வது அதன் நோக்கமாகும்.  சிந்து நதி நீரை நிறுத்தி வைக்கும் முடிவு, நீரை இந்திய அரசு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கூடுதல் விருப்பங்களை வழங்குகிறது.இஸ்லாமாபாத்திலிருந்து PTI செய்தி நிறுவனம் கூறிய தகவல்கள்:இந்தியா சிந்து நதி நீரை நிறுத்த முடிவு செய்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய கால்வாய்கள் திட்டத்தை நிறுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக இஸ்லாமாபாத்திலிருந்து PTI செய்தி நிறுவனம் கூறியது. பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாலைவனப் பகுதிக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக பிப்ரவரியில் லட்சிய சோலிஸ்தான் திட்டத்தை அந்நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இருப்பினும், இது சிந்து மாகாணத்தில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது, அங்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) உடன் மத்தியில் ஆளும் கூட்டணியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கின.இரு கட்சிகளுக்கும் இடையிலான பதற்றத்தின் உச்சக்கட்டத்தில், இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரியை சந்திக்க வேண்டியிருந்தது. மேலும் அவர்கள் கால்வாய் திட்டத்தை நிறுத்த ஒப்புக்கொண்டனர்”பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் இடையேயான கூட்டத்தில், CCI-யில் பரஸ்பர ஒருமித்த கருத்து முடிவு எட்டப்படும் வரை, எந்த கால்வாய் கட்டப்படாது என்றும், மாகாணங்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லாமல் கால்வாய்களில் முன்னேற்றம் இருக்காது என்றும் அரசு முடிவு செய்துள்ளது” என்று அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version