பொழுதுபோக்கு
‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?’ – மேடையில் காதலை சொன்ன டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டர்.. கண்கலங்கிய காதலி!
‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?’ – மேடையில் காதலை சொன்ன டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டர்.. கண்கலங்கிய காதலி!
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ”டூரிஸ்ட் ஃபேமிலி”. இந்தத் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.இந்தப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் அபிஷன், இறுதியாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த தன்னுடைய காதலியிடம் காதலை கூறி, தன்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டார். இதைக்கேட்ட அவரது காதலி கண்கலங்கினார்.Wow !! So Cute & Heartwarming clip 🫶♥️#TouristFamily Director Abishan PROPOSES his girlfriend & asks to marriage at the pre release event💫pic.twitter.com/1UEW9fMlWF இதுகுறித்து இயக்குநர் பேசும்போது, ‘ நான் ஒருவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல விருப்பப்படுகிறேன். அவர் பெயர் அகிலா இளங்கோவன். அவளை எனக்கு 6 வது படிக்கும் போதிலிருந்தே தெரியும். 10 ஆம் வகுப்பில் இருந்து நாங்கள் மிகவும் நெருக்கமானோம்; இந்த இடத்தில் நான் உன்னிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றை கேட்க மட்டும் தோன்றுகிறது. அக்டோபர் 31ஆம் தேதி நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா..? நான் இப்போது இப்படிப்பட்ட ஒரு மனிதனாக இருப்பதற்கு என்னுடைய அம்மாவிற்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு அகிலாவுக்கும் இருக்கிறது.’ என்றார். இதைக்கேட்ட அகிலா கண்கலங்கினார்.தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.