உலகம்

குர்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றிய ரஷ்யா

Published

on

குர்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றிய ரஷ்யா

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருந்த போதிலும் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. 

Advertisement

அதே போல் உக்ரைனும் தாக்குதல் நடத்துகிறது.

இப்போரில் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமாா் 1,300 கி.மீ. நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது. 

இப்பகுதியை மீட்க ரஷிய ராணுவம் தீவிரமாக சண்டையிட்டது.

Advertisement

இந்த நிலையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டு அப்பகுதியை முழுமையாக மீட்டு விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.

குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படையினா் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டு விட்டனா். இந்தத் தகவலை அதிபா் புதினிடம் ரஷிய முப்படை தளபதி வேலரி கெராஸி மொவ் தெரியப்படுத்தினாா் என்றார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version