இலங்கை

கொழும்பு கிராண்ட்பாஸ் பெண்ணின் கொலை தொடர்பில் வெளியான தகவல்

Published

on

கொழும்பு கிராண்ட்பாஸ் பெண்ணின் கொலை தொடர்பில் வெளியான தகவல்

கடந்த 22ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அப்பெண்ணின் கணவன் மற்றும் மருமகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்,

Advertisement

குறித்த பெண் கூர்மையான ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது சடலம் அருகில் உள்ள கால்வாயில் கொண்டுச்சென்று வீசப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

65 வயதான குறித்த பெண், ஆணொருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று அந்நபருடன் பயணம் செய்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version